நடிகர் வேணு அரவிந்த் தொலைக்காட்சி தொடர்களால் ரசிகர்களை கவர்ந்தவர். வாணி ராணி, அலைகள் உள்ளிட்ட பல தொடர்களில் வேணு அரவிந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
அவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். அதைத் தொடர்ந்து அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரது மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பின்னர் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்.
பின்னர் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.