கொடைக்கானலில் மலை பூண்டு சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் வருவாய் கோட்டாசியரிடம் மனு

கொடைக்கானலில் மலை பூண்டு சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் வருவாய் கோட்டாசியரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தொடர்ந்து இங்கு கேரட் , பீன்ஸ் , அவரை , உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு , உள்ளிட்டவை அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது மேல்மலை கீழ் மலை கிராமங்களில் வெள்ளைப்பூண்டு விவசாயம் அதிகம் செய்து வருகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் வெள்ளைப்பூண்டு தேனி மாவட்டம் வடுக்கப்பட்டிக்கு அனுப்பப்படும். இவ்வாறாக அனுப்படுவதால்  போதிய பயனில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர் . எனவே கொடைக்கானலில் பூண்டு சந்தை அமைக்க வேண்டுமெனவும் ,அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும் ,ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்க வேண்டுமெனவும் வருவாய் கோட்டாசியர் முருகேசனிடம் மனு அளித்தனர். இது குறித்து அரசுக்கு கவனத்த்திற்கு எடுத்து செல்லபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!