அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கெட்சிகான் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு சிறிய விமானத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு அவசர தகவல் சென்றது. இந்த தகவலை அறிந்த அவர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் விபத்துக்களாகி அதில் இருந்த ஆறு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
விபத்தில் இறந்தவர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. வானிலை நிலைமைகள் மேக உச்சவரம்பு 274.32 மீட்டர் (900 அடி) மூடுபனி மற்றும் லேசான மழை. பார்வைத்திறன் 3.22 கிமீ (இரண்டு மைல்கள்) மற்றும் காற்று 12.87 கிமீ (8 மைல்) என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.