இன்று “நிழலில்லா நாள்”

வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே மதிய வேளையில் நிழல் நம் காலடியில் விழும் அளவிற்கு பார்க்க முடியும். இதை தான் நிழல் இல்லாத நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிழல் இல்லாத நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வருகிறது.

அதன்படி, இந்த நிழல் இல்லாத நாளை இன்று ஆகஸ்டில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கில் ‘நிழல் இல்லாத நாள்’ பற்றிய விளக்கக்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!