கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகள் இன்று முதல் திரையரங்குகள்.
இதை பற்றி தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறியது,
* அரசின் முறையான நடைமுறைகளை பின்பற்றும் வகையில் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் செயல்படும்.
* பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
* சமூக இடைவெளி பின்பற்றி இருக்கைகள் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளன.
* டிக்கெட் கட்டணத்தை உயர்த்த போவது இல்லை.. மேலும் அணைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. எனவே பொதுமக்கள் எந்த அச்சம் இல்லாமல் தங்களுக்கு பிடித்த படங்களை கண்டு களிக்கலாம் என அவர் கூறினார்.