கத்தாரில் உள்ள தலிபான் அரசியல் அலுவலகத்தின் துணைத் தலைவர் அப்துல் சலாம் ஹனாபி, ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதர் வாங் யூவை காபூலில் சந்தித்தார் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சீனத் தூதரகம் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை, இருதரப்பு உறவுகள் மற்றும் சீனாவின் மனிதாபிமான உதவிகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.