திட்டமிட்டபடி தியேட்டர்கள் திறக்கப்படுமா? உரிமையாளர்கள் வெளியிட்ட புதிய தகவல்!

திட்டமிட்டபடி தமிழகத்தில் வரும் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என்று, என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. கோவிட் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 10ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படவும், கடும் நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

எனினும், விபிஎப் கட்டணம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் – திரையரங்க உரிமையாளர்கள் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாட்டால், திட்டமிட்டபடி திரையடங்குகள் திறக்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 10ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

விபிஎப் கட்டணம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள்-தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், திரையரங்க உரிமையாளர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தற்போது, தங்களிடம் உள்ள திரைப்படங்களை திரையிட முடிவு செய்திருப்பதாகவும், ஓரிரு நாளில் தயாரிப்பாளர்கள் நல்லதொரு முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புவதாகவும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!