கேரளாவில், நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனுடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அவர்களில் 8 பேர் பாதிக்கப்படவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.
மேலும், சிறுவனுடன் தொடர்பில் இருந்த 251 பேரை கேரள சுகாதாரத் துறை அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் 38 பேர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்டு பேரின் மாதிரிகள் ஆரம்பத்தில் புனேவுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவை நிபா இல்லாததாக கண்டறியப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். நிபா வைரஸ் கட்டடறியப்பட்ட அனைவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.