ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அரசு பல தளர்வுகளுடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்து வருகிறது, இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள முக்கிய இடங்களான படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில் போன்ற இடங்களுக்கு அதிக அளவில் செல்கின்றனர், இவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்லும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த பார்க்கிங்க் வசதி இல்லாதத காரணத்தால் தங்களது வாகனங்களை மெயின் ரோட்டிலியே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர், அவ்வாறு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் அந்த வழியாக நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் மற்றும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இது மட்டுமல்லாமல் சாலை யோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் மோதி விபத்து ஏற்படும் அப்பாயமும் உள்ளது, சனி மற்றும் ஞாயற்றுகிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்காடு காவல் துறையினர் போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர், அது போலவே வாரத்தின் இடைப்பட்ட நாட்களில் வரும் விடுமுறை நாட்களிலும் அந்த இடங்களில் போக்குவரத்தை சரிசெய்தல் இதுபோன்று சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவது தவிர்க்கப்படும், மேலும் விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர் .
மேலும் இதுபோன்ற மக்கள் அதிகமாக செல்லக்கூடிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.