தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்குள் அனைவரும் தாமாக முன்வந்து, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி போடப்படவில்லை.
நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால் திங்கள் கிழமைகளில் தடுப்பூசி சேவைகள் நடைபெறாது. காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.