பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் குறித்து அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். அதனடிப்படையில், தங்க கட்டிகளாக மாற்றி அதன் மூலம் வருவாய் ஈட்டும் இந்து சமய அறநிலையத்துறையின் திட்டம் தொடங்கப்பட்டது.  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோயில்களும் உண்டியலில் கிடைக்கப்பெற்று பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகளின் அளவு குறித்து ஆய்வு நடத்தி வரும் நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2016ல் தங்க நகைகளின் விவரம் குறித்து ஆய்வு செய்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!