ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மகாள அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
மகளாய அமாவாசையானது வருகிற 6ஆம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் கூடுவதை தவிர்க்கவும், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலும் வருகிற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று அக்னி தீர்த்த கடற்கரைக்கு வருகை தந்த ஏராளமான வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, திதி கொடுத்தனர்.
இதனால் கடற்கரை எங்கும் மக்கள் கூட்டம் காணப்பட்டது, தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், இது மேலும் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க கூடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.