சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் கோயம்பேடு பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக பொருத்தப்பட்ட டிஜிட்டல் எல்இடி சிக்னலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை கோயம்பேடு, மெட்டுக்குளம் அருகே போக்குவரத்து காவல் துறையினர் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Digital LED Signal தூணின் இயக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) கண்ணன், போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) லட்சுமி, போக்குவரத்து இணை ஆணையாளர் பாண்டியன், போக்குவரத்து துணை ஆணையாளர் M.M. அசோக்குமார் (போக்குவரத்து மேற்கு), போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.