கர்னாடகாவில் சினிமா நடிகைககள் போதை மருந்து கடத்தல், உபயோகப்படுத்துதல் என இந்திய திரையுலகமே பரபரத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் விஸ்கிக்கு மிக்சிங் எப்படி என்று கற்றுக் கொடுத்திருக்கிறார் பிரபல நடிகை இஷா குப்தா.
ஜானி வாக்கர் என்ற உயர்ரக மது குடிப்பது போன்ற ஒரு படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள அவர், எப்படி சரக்குக்கு மிக்ஸிங் செய்வது என்பது போல ஒரு குறிப்பையும் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்கள் இஷா குப்தாவை தாறுமாறாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.