தோனி மனைவி கர்ப்பம் – உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தல தோனி

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. துபாயில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாகக் கைப்பற்றியது. போட்டியின் முடிவில் தோனியின் மனைவி சாக்‌ஷி, மகள் ஸிவாவுடன் மைதானத்துக்குள் வந்து தோனியுடனும் இதர கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருடனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக உள்ளதாகவும் 2022-ல் குழந்தை பிறக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Translate »
error: Content is protected !!