கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று சூறைக்காற்றில் ஆட்சியர் கட்டிட முகப்பு முன்பு வேரோடு சாய்ந்து விழுந்தது.
அரபிக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்து. இதனைத் தொடர்ந்து இன்று மதியம் சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்யது. இதில் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நின்ற காட்டுமரம் ஒன்று சூரைக்காற்றுக்கு வேரோடு சாய்ந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் ஆபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றினர்.