உலக கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து அணி தகுதி

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஓமனை வீழ்த்திய ஸ்காட்லாந்து அணி, சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. அல் அமீரட் நகரில் நடைபெற்ற 10-வது ஆட்டத்தில், பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஓமன் அணி, 122 ரன்களை மட்டுமே எடுத்தது.

123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில், அதிகபட்சமாக கைல் கோட்சர் 41 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 17 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்த ஸ்காட்லாந்து அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து, டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Translate »
error: Content is protected !!