தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை,
ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் ரூ 5, டீசல் ரூ 4 குறைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் வரியை லிட்டருக்கு ரூ 3 மட்டுமே குறைத்தது. டீசல் மீதான வரியை குறைக்கவில்லை. மற்ற மாநிலங்களை விட அதிகபட்சமாக தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். கர்நாடக மாநிலம் பெட்ரோல் விலை ரூ.13.35 வரை குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பெட்ரோல் விலை ரூ.12.85 வரை குறைத்துள்ளது அதுபோல மதிப்புக்கூட்டு வரியை மற்ற மாநிலங்களை விட அதிகளவில் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுளார்.