வால்பாறையில் வனத்துறை முகாமை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை அருகே, வனத்துறை முகாமை யானைகள் தாக்கி சேதப்படுத்தின; அவற்றை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சோலையார் எஸ்டேட்; இப்பகுதியில், ஐந்து யானைகள் கொண்ட கூட்டம், தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் மருத்துவ அலுவலர் குடியிருப்பு பகுதியில் நடமாடின.

இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மருத்துவர் குடியிருப்புக்குள் நுழைய முயன்ற யானைகளை, சத்தம் எழுப்பி வனத்திற்குள் விரட்டினர்.

இதற்கிடையே, வால்பாறை முடீஸ் பஜார் சாலையை கடந்து சென்ற யானைக்கூட்டம், ஷேக்கல்முடி எஸ்டேட்டில் வனத்துறை முகாமை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின.

ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் கூறுகையில், வனத்தை விட்டு யானைகள் வெளியேறி வருவதால் எச்சரிக்கையுடன் மக்கள் நடமாடவேண்டும். யானைகளை கண்டால் வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Translate »
error: Content is protected !!