சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ஸில் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குச் சென்றார். ரயிலில் இருந்து இறங்கும் போது பை மற்றும் 46 சவரன் நகைகளை தவறவிட்டுளார். இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசில் புகார் செய்தார்.
இதனிடையே ரயில், கன்னியாகுமரி வந்தடைந்ததையடுத்து. நாகர்கோவில் ரயில்வே போலீஸார் கன்னியாகுமரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்து ரயிலில் இருந்த நகைகளை மீட்டு சரவணனிடம் ஒப்படைத்தனர்.