50% அதிகமானோர் தடுப்பூசி செலுத்தினர் – இந்தியா பெருமிதம்

 

இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பரவல் பீதிக்கு மத்தியில் இந்தியாவில் பரவலைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் தகுதியுடைய மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முழு அளவும் செலுத்தப்பட்டுவிட்டதாக கூறினார். இது மிகவும் பெருமையான தருணம் என குறிப்பிட்ட அவர், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்தியாவில் 100 சதவீதம் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறினார். மேலும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ்கள் போடுவது ஆகியவை அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!