ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது – தென்னாப்பிரிக்க மருத்துவர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், அதன் தற்போதைய நிலை இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் மாறலாம் என்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இறப்பு ஆபத்து மிகக் குறைவு என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய நிலைமை விரைவில் மாறக்கூடும் என்றாலும், கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவது என்பது அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!