57 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான்..!

உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஓமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஓமிக்ரான் தொற்று பரவல் குறித்து பேசுகையில், ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார். இதுவரை 57 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனம் (WHO), ஓமிக்ரானின் பரவல் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறதா, சிகிச்சை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைக் கண்டறிய அதிக நேரம் எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!