அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூப்பர் மரிதாஸ் மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை ராணுவ தலைமை தளபதி உயிரிழந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக 5 பிரிவுகளில் யூடியூப் மாரிதாஸை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாரிதாஸ் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாரிதாஸை ட்விட்டரில் 2 லட்சம் பேர் பின்தொடர்வதாகவும், மனுதாரர் மாரிதாஸ் நன்கு அறிந்தே இந்தக் கருத்தை பதிவு செய்ததாகவும் கூறி, அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மதுரை சைபர் கிரைம் போலீசார் ரத்து செய்வதாக அறிவித்தனர்.