தமிழக அரசு முதற்கட்டமாக எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தொகுதி மேம்பாட்டுக்கு ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையை கொண்டு எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள்.
இந்நிலையில் 2021-2022ஆம் நிதியாண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதம் அதாவது 352 கோடி ரூபாயை தமிழக அரசு விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.