சீனாவின் வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என கனடாவைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் கூறியுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் எம்.பி.,க்களிடையே பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இது வுகான் பகுதியில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து இயற்கையாக பரவவில்லை என்றும், அங்குள்ள ஆய்வகத்தில் உயிரி பொறியியல் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்டு பரவியிருக்கலாம் என்றும் அலினா சென் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா வைரஸை சீனா பரப்பியதாக பல நாடுகள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், விஞ்ஞானி அலினா சென்னின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.