கல்வி உதவித் தொகையில் முறைகேடு தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பட்டியலில் 52 கல்லூரிகளில் சுமார் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கைத் துறை அறிக்கை அளித்திருந்தது. இதையடுத்து, 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு தொடர்பான வழக்கில், பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரி, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து நாளை முதல் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Translate »
error: Content is protected !!