ரோட்டில் சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்த அம்மா பேட்ரோல் போலீசார்

மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் சுற்றித்திரிந்த இளம்பெண்ணை அம்மா பேட்ரோலில் ரோந்து சென்ற மகளிர் போலீசார் மீட்டு மனநல மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

சென்னை பெருநகரில் ஆதரவற்றோர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் அம்மா ரோந்து வாகனங்கள் சென்னை நகரம் முழுவதும் ரோந்துப்
பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், குடிசைப்பகுதிகள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பெண்கள் விடுதிகள், பூங்கா பகுதிகள் மற்றும் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்கள் போன்ற பகுதிகளில்
ரோந்து செய்து ஆதரவற்றோர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எஸ்ஐ அஞ்சலி மற்றும் பெண் தலைமைக் காவலர்கள் சசிகலா, வி சசிகலா ஆகியோர் தி.நகர் பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்த ஒரு பெண்ணை கண்காணித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு கவனிக்க ஆளில்லாமல் தி.நகர் பகுதிகளில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவரை அகல் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்தப் பெண் பெயர் சங்கீதா (வயது 35) என்பது தெரியவந்தது. அதனையடுத்து அந்த பெண் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அன்பகம் மனநலம் பாதித்தோர் மறுவாழ்வு முகாமில் போலீசார் சேர்க்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!