தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று குறித்த ஆய்வை முதல்வர் நேரில் வந்து நேற்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மற்றும் டி. எம். எஸ் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ஹோமியோபதி, சித்தா, யூனானி போன்ற மருத்துவத்தில் முதல் மற்றும் இரண்டாம் அலையின் பொது பயன்பெற்றது போல ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் தற்போதும் அதன் பயன்பாடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் 77 இடங்களில் இந்திய மருத்துவம் சார்பில் கொரொனா கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டது. ஆயிரத்து 542 மையங்கள் இயங்கி வருகிறது. அதில் 1700 படுக்கைகள் உருவாக்கப்பட்டது. அதை மீண்டும் தாயார் நிலையில் வைக்க data cell மையம் தொடங்கி இருக்கிறோம் என்றார்.