குவார்ட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்

 

புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி ஒரு குவாட்டர் சரக்கு வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என்று அறிவித்ததால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாலை முதலே மதுபான கடையில் குவிந்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் குடி பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில் தவளக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுபான கடையில் புத்தாண்டு தினத்தையொட்டி ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என அறிவித்து வழங்கி வருகின்றனர். இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெறும் இந்த இலவச அறிவிப்பை அறிந்து கொண்ட ஏராளமான குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாலை முதலே மதுபான கடையில் குவிந்து குவாட்டர் சிக்கன் 65 வாங்கி மகிழ்ச்சியுடன் அருந்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!