ஒமைக்ரான் பரவல்: ஒரே நாளில் 2,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

ஒமைக்ரான் தொற்று காரணமாக உலகம் முழுவதும் நேற்று 2,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கிட்டத்தட்ட 12,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன. வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் விமான நிலைய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இது குறித்து ஜெட் புளு விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது :

ஜனவரி 2 ஆம் தேதிக்கு முன் பயணிகள் மேற்கொள்ள இருக்கும் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வரும் நாட்களில் அமெரிக்காவில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!