புத்தாண்டில் மது விற்பனையில் இறங்கி சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்தவர் நிதி அகர்வால். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். நிதி அகர்வால் தற்போது மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், நிதி அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மது பாட்டிலைத் திறந்து, கையில் இருக்கும் கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்த்து, அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என பேசியும் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த பிராந்தியான மார்பியஸ் ஒரு மாஸ்டர் பீஸ். தற்போது அழகான கோப்பையுடன் வருகிறது, எனவே நீங்கள் ஒவ்வொரு சிப்பையும் சிறந்த முறையில் சுவைக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மதுபான விளம்பரத்தில் நிதி அகர்வால் நடித்திருப்பது சமூக ஆர்வலர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர்களை மது அருந்தத் தூண்டிய நிதி அகர்வாலை இணையதளத்தில் பலரும் விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!