இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சிகிச்சை பெற்று, கொரோனாவில் இருந்து குணமடைந்தார். அவரை 2 வாரங்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், சவுரவ் கங்குலி குடும்பத்தில் மகள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேரும் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கங்குலியின் மனைவி டோனாவுக்கும் கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.