இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் உச்சத்தை தொடும் போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை நெறுங்கும் என அமெரிக்கா சுகாதார நிபுணர் கிறிஸ்டோபர் முர்ரே எச்சரித்துள்ளார். இந்தியாவில் இன்று கொரோனா தினசரி பாதிப்பு ஒரு லட்சத்து 41ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் பிப்ரவரியில் கொரோனா 3 ஆம் அலை உச்சத்தை அடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை நெறுங்கும் என அமெரிக்கா சுகாதார நிபுணர் கிறிஸ்டோபர் முர்ரே எச்சரித்துள்ளார். மேலும் , டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது மருத்துவமனையில் சேர்க்கக்கூடிய மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து ஒமிக்ரானில் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.