ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு வீட்டை விட்டு வெளியே வந்து பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

“அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம்.

இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவும கிடையாது.

அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!