பொங்கல் விடுமுறைக்கு பிறகு தொற்று அதிகரிக்க வாய்ப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படுக்கைகள் 9,000க்கும் குறைவாகவே நிரம்பியுள்ளன. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 100% பள்ளி மாணவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 90 லட்சம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!