நடிகர் தனுஷின் திடீர் விவாகரத்து… ரஜினி மகள் ஐஸ்வர்யாவை பிரிந்தார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் மற்றும் அவரது மனைவி ஜஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு திடீர் என்று அறிவித்தார். இவர்கள் இருவரும் காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு திடீரென தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18 வருடங்களாக தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்து வந்தோம். தற்போது ஐஸ்வர்யாவும் நானும் அவரது வழியில் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களின் முடிவை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

நடிகர் தனுஷின் திடீர் விவாகரத்து ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது போன்ற அறிக்கையை ஐஸ்வர்யாவும் வெளியிட்டுள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!