கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கான இன்று கோவில் முன்பு வைத்து 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. முகூர்த்தநாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு திருமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் மலைமீது உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கோவில் முன்பு உள்ள சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் ஏராளமான மக்கள் திரண்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.