திருப்பூரில் விசைத்தறியாளர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால், அவிநாசி காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறியாளர்கள் கடந்த 9-ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உப்பிலிபாளையத்தில் ஜெயப்பிரகாஷ் என்பவர் விசைத்தறியை இயக்கிக் கொண்டதை அறிந்த சங்க நிர்வாகிகள், வேலை நிறுத்த காலத்தில் விசைத்தறியை இயக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த அவர் அவிநாசி காவல் நிலையத்தில் சங்க நிர்வாகிகள் மீது புகார் அளித்தார். இதையடுத்து, ஜெயப்பிரகாஷின் புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி காவல் நிலையம் முன்பு விசைத்தறியாளர்கள் ஒன்று திரண்டதால் பெரும் பரப்பு ஏற்பட்டது.