தைவானை விட்டு விலகியிருக்கும்படி சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தைவானை விட்டு விலகியிருக்கும்படி சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க கடற்படை இரண்டு அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பிலிப்பைன்ஸ் கடற்பகுதிக்கு போர் பயிற்சிகளை மேற்கொள்ள அனுப்பியுள்ளது.இதனுடன் ஜப்பான் போர்க்கப்பலும் பயிற்சியில் இணைந்துள்ளது.

தைவானின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்சீனா ஜே 10, ஜே 16 வகைகளைச் சேர்ந்த 39 போர் விமானங்களை தைவான் நாட்டுக்கு அருகில் உள்ள வான்பரப்பில் பறக்கவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!