தமிழகத்தில், முன்னணி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்தும் பணி கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வியாழன் தோறும் சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சி, பேரூராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு உட்பட்ட 600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. 2வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.