தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்க முடியுமா? என்பது சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.