ஆஸ்திரேலியாவில் கோலா கரடிகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்காக அடுத்த நான்காண்டுகளில் மேலும் 35 மில்லியன் டாலர் நிதி செலவிடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிஸ் தெரிவித்துள்ளார். அங்கு கோலா கரடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. காட்டுத் தீ, வாகனங்களில் அடிபடுவது, நோய்த் தாக்கம் என அதன் அழிவு அதிகரித்து வருகிறது. இதையடுத்து. கோலா கரடிகளை பாதுகாப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட நிதி ஒதுக்கீடுகளை அரசு செய்து வருகிறது. கோலாக்களின் வாழ்விடப் பாதுகாப்பு, அதன் எண்ணிக்கை கணக்கெடுப்பு மற்றும் கோலா கரடிகள் தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுவதாக பிரதமர் ஸ்காட் மோரிஸ் குறிப்பிட்டுள்ளார்.