உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.
உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செவிலியர் மாணவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து மருத்துவமனை கான்பிரஸ் ஹாலில் நடைபெற்ற புற்று நோய் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் புற்று நோயால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்களுக்கு புரோட்டீன் பவுடர் வழங்கி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.