கடந்த 3 ஆண்டுகளில் 241 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்து உள்ளனர் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளில் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த இந்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பாகவும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளதா? என மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் விஜய் பாஹீல் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு கட்டாய காப்பீட்டு முறை என்பதை இந்திய அரசு கடைபிடித்து வருவதாகவும் அதன் அடிப்படையில் இந்தியர் ஒருவர் வெளிநாடுகளில் உயிரிழந்தால் அவர்களுக்கு தேவையான இழப்பீடு சட் இழப்பீடு உள்ளூர் சட்டங்களின் மூலமாகவே வழங்கப்பட்டு விடுகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சூடான், மலேசியா, ஓமன், அஹ்ரைன், அஜர்பைஜான், போர்ச்சுகல், ஈராக், மொரிஷியஸ், ருமேனியா மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு விபத்துகளில் 241 இந்தியர்கள் உயிரிழந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது; இதில் அதிகபட்சமாக 81 இந்தியர்கள் கத்தார் நாட்டில் உயிரிழந்து உள்ளனர்.