350 கிலோ கெட்டுப்போன மீன்கள் சுகாதாரத்துறையினரால் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 350 கிலோ கெட்டுப்போன மீன்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தர் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், அங்கு கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அங்கு விரைந்த அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டதில் இறால், மீன் உள்ளிட்டவை கெட்டு போய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் நிலத்தில் கொட்டி அழித்தனர். மேலும், இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

Translate »
error: Content is protected !!