நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலங்களவை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் இறுதி நாளான இன்று பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரானம் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், 2008- 2009 ஆண்டில் விலைவாசி உயர்வு 9.1 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது கொரோனா காலத்திலும் விலைவாசி உயர்வை 6.2 ஆக மத்திய அரசு கட்டுப்படுத்தி வைத்துள்ளதாகவும் கூறினார். மேலும், மத்திய பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பட்ஜெட்டில் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Translate »
error: Content is protected !!