இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்வு

உக்ரைன், ரஷ்யா போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதன் எதிரொலியாக உலகப் பொருளாதாரம் பலதரப்பட்ட பாதிப்புகளைக் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி வர்த்தக சந்தை இன்று காலை தொடங்கிய போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய் 90 காசுகளாக இருந்தது. பின் இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் அதிகரித்து அமெரிக்க டாலருக்கு நிகராக 76 ரூபாய் 78 காசுகள் என நிலைக் கொண்டு வர்த்தகமானது. தொடர்ந்து 5 நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!