மதுரை பால் பண்ணை வளாகத்தில், ஆவின் நிறுவனத்தின் புதிய ஐஸ்க்ரீம் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில், பல்வேறு நலத்திட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 23 புள்ளி 11 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான 4 விடுதி கட்டடங்களை திறந்து வைத்தார். 28 கோடியே 8 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகள், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வளாகத்தில் 56 கோடியே 48 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.