ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
குரானின் படி, இது ஒரு மத நடைமுறை அல்ல என்பதாலும், கல்வி நிறுவனத்திற்குள் ஒரு மாணவர் நுழையும் போது, பொதுவான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையிலும், இந்த தீர்ப்பு சரியானது என்று அவர் கூறியுள்ளார்.
உடை அணிவது தொடர்பான பெண்களின் உரிமைகளை ஆதரிக்கும் அதேவேளையில், ஒரு நிறுவனத்தில் சீரான உடை அணிய வேண்டும் என்ற விதி இருந்தால், அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சாதி, மத வேறுபாடின்றி, இனி மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்புவார்கள் என்று நம்புவதாகவும் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.